நான் காசாவின் மத்தியபகுதிக்கு வாகனத்தில் சென்றேன் இஸ்ரேலின் விமானதாக்குதலில் இடிந்துவிழுந்துள்ள கட்டிடம் முக்கியமான வீதியின் போக்குவரத்தை தடைசெய்துள்ளது.
காசா மக்களிற்கு இணையவசதிகளை வழங்கிவந்த முக்கியமான கட்டிடம் அழிக்கப்பட்டுள்ளதால் காசாவில் இணையவசதி இல்லாத நிலை காணப்படுகின்றது.
தொடர்பாடல் என்பது கடினமாக உள்ளது ஆனாலும் நான் தப்பியோடிக்கொண்டிருக்கின்ற பொதுமக்களுடன் உரையாடினேன்,
அனேகமானவர்கள் கலவையான உணர்வை கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் பாலஸ்தீனியர்களிற்கு மகிழ்ச்சியை கொண்டுவந்தது,இஸ்ரேலின் தாக்குதலிற்கு ஹமாஸ் பழிவாங்குகின்றது என அவர்கள் தெரிவித்தனர்,அதேவேளை இந்த யுத்தம் நீண்டநாள் நீடிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.
இஸ்ரேல் காசாவிற்கான மின்சாரம் எரிபொருள் விநியோகம் போன்றவற்றை துண்டிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
மக்கள் மனிதாபிமான நிலை குறித்து கரிசனை கொண்டுள்ளனர்.
பிரதான வீதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன,சில வெதுப்பகங்கள் மாத்திரம் திறந்திருக்கின்றன.