நீட் மருத்துவ நுழைவு தேர்வுக்கான தேர்வு மையங்கள் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டு இருப்பதைக் கண்டித்து சி.பி.எம் கட்சி சார்பில் சிவகங்கை பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட நாற்பது பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சி.பி.எம் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கந்தசாமி பேசும் போது.., ‘நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று போராடி வருகின்ற வேளையில் நீட் தேர்வு மையத்தை வெளிமாநிலங்களுக்கு மாற்றி இருப்பது தமிழக மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொழி தெரியாத மாநிலம், நீண்ட நெடிய பயணம், பஸ், ரயில் முன்பதிவு செய்ய முடியாத நிலை, இதையெல்லாத்தையும் விட ஏழை மாணவர்கள் இந்த தேர்வை எழுத முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது மத்திய அரசு. கிராம புறத்தான் டாக்டர் ஆக கூடாது என்பதில் பி.ஜே.பி அரசாங்கம் சரியாக இருக்கிறது. வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது கிராமப்புற மாணவர்கள் தான்.
தமிழக அரசு முன்கூட்டியே மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். செய்ய தவறி விட்டது எடப்பாடி தலைமையான தமிழக அரசு. நாளை கேரளா, ராஜஸ்தான் சென்று தேர்வு எழுத போகும் மாணவர்கள் துணையின்றி தேர்வு எழுத செல்லமுடியாது. தமிழக அரசு அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாய் பணம், ரயில், பஸ் சலுகையெல்லாம் மாணவர்களுக்கு பயன்படாது.
கிராமபுறத்தில் இருந்து செல்லும் மாணவன் அப்பாவுக்கோ, மாணவனுக்கோ ராஜஸ்தானில் எந்த ஸ்கூல் தன் மகனுக்கு செண்டர் என்பதை எப்படி யாரிடம் கேட்டு போவார். இதுயெல்லாம் மத்திய அரசின் யுத்தம், நான் கொண்டு வந்த திட்டத்தை எதிர்த்த தமிழக மக்கள் நீட் செண்டரை தமிழகத்தில் அமைக்கச் சொல்லி போராடுவார்கள்.
ஆக நீட் தேர்வு தமிழகத்தில் சக்ஜஸ் என்கிறது பி.ஜே.பி. எனவே தான் நீட் தேர்வை எதிர்த்து போராடி வருகிறோம். தமிழகத்தில் இருந்து சுமார் பத்தாயிரம் பேராவது இந்த தேர்வுக்காக செல்லுகின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக சாலைமறியலில் ஈடுபட்டோம். சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறோம்” என்றார்.