Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிவாரணப் பொருட்களை இலவசமாக வழங்குங்கள்

March 30, 2020
in News, Politics, World
0

மக்களுக்கான நிவாரணப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவே பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்நின்று செயற்படும் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்கும் ஏனைய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் எவ்வித கட்சிபேதமுமின்றி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.

அதேவேளை தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின், அதனைச் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பும் எமக்கிருக்கிறது.

அந்தவகையில் இன்றளவில் உணவுத்தட்டுப்பாடு மற்றும் வருமான இழப்பு என்பவற்றின் காரணமாக பெருமளவான மக்கள் பாரிய நெருக்கடிநிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.

வறியவர்கள், கூலிவேலை செய்வோர், சுயதொழிலில் ஈடுபடுவோர், முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தற்போதைய சூழ்நிலையில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய துன்பங்களை நாமனைவரும் புரிந்துகொள்வது அவசியமாகும். நாம் எவ்வித சுயநல எண்ணமுமின்றி, பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்து உதவுவதற்கு முன்வரவேண்டும்.

அவர்களது கைகளில் குறித்தளவு நிதியைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு வேலைத்திட்டத்தை உடனடியாக செயற்படுத்துவது அவசியமாகும். இந்த நெருக்கடி நிலையில் மனிதாபிமான அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வரவேண்டும்.

எனவே இப்போது மக்களுக்கான நிவாரண உதவி என்ற பெயரில் அதற்காக அவர்களிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன். மக்களுக்கான நிவாரணப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவே பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்ற பரிசோதனையை மேற்கொள்ளும் எண்ணிக்கையும் வேகமும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அந்த வசதிகள் அமெரிக்காவில் இருக்கின்ற காரணத்தினால் அந்நாட்டு சுகாதார அமைச்சரிடமிருந்து இதுகுறித்த ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஜூன் மாதம் பொதுத்தேர்தல் நடக்கும் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியீடு

Next Post

கொரோனா என்னும் உயிர் கொல்லி;ஒரு மாற்றுத் திறனாளியின் மடல்!

Next Post

கொரோனா என்னும் உயிர் கொல்லி;ஒரு மாற்றுத் திறனாளியின் மடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures