சொற்களைத் தேடி நடந்துகொண்டிருக்கிறேன்
மரங்களின் இலைபோல் சில
காலுடைக்கும் கல்போல் வேறு சில
அன்பின் பந்தத்தை கிழிப்பனவாக
இன்னும் சில கடந்து கொண்டிருக்கின்றன
சொற்கள் தொங்கிய முத்த வாயும்
சொற்கள் கொல்லும் விச நாவும்
மனிதனுடையவை
சொல்
சொல்லாமல்க் கொல்லும் நோய்
சொல் மெல்லென சுகமாக்கும் பாய்
இயாகோவின் சொல் தெஸ்திமோனாவைச் சரித்தது
கசியோவின் சொல் சீசரைக் கொன்றது
மார்க் அன்ரனியின் சொல் உரோமத்தை மீட்டது
காந்தனின் சொல் இசையினைப் பிரித்தது
சகுனியின் சொல் பாரதத்தை எரித்தது
கண்ணகியின் சொல் மதுரையை மூட்டியது
ஈழத்தவனின் சொல் கார்த்திகையைப் பாடியது
சொற்களைப் போல் தேவனுண்டா
சொற்கிளில்லா தேவதைதான் அழகா
சொற்களாலே வாழ்வு வசப்படும்
ஈழ சொற்களாலே நாளைக்கும் நிலவு வரும்
த.செல்வா
12.22
பரமேஸ்வராச் சந்தி