தென் கொரியாவில் ‘ஹின்னம்னார்’ என்ற சக்தி வாய்ந்த சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
போஹாங் நகரத்திலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இருந்த ஒன்பது பேரின் காரை வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து அகற்றுமாறு குடியிருப்பு நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய தங்கள் வாகனங்களை அகற்ற சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளார்கள்.
இந்நிலையில், 2 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
உயிர் பிழைத்தவர்கள் 30 வயதுடைய ஒரு ஆணும், 50 வயதுடைய ஒரு பெண்ணும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடும் முழுவதிலும் சம்பவம் நடந்த போஹாங் நகரமான மிக மோசமான சேதத்தை சந்தித்தது என தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் தெரிவித்துள்ளார்.
மேலும், இறந்தவர்கள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, இது ஒரு “பேரழிவு” என்றார்.
“போஹாங்கில், குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களை மீட்டெடுக்கச் சென்றனர்… ஆனால் இதுபோன்ற பேரழிவை சந்தித்ததால், ஜனாதிபதியாக என்னால் இரவில் தூங்க முடியவில்லை,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹின்னம்னார் சூறாவளியால் 66 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.