Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நிர்மலா தேவி வழக்கிலிருந்து வி.வி.ஐ.பி-க்கள் எஸ்கேப்?

April 27, 2018
in News, Politics, World
0

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தொடர்புடைய வி.வி.ஐ.பி-க்களைத் தப்பிக்க வைக்க பலவிதங்களிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகச் சி.பி.சி.ஐ.டி வட்டாரத் தகவல்கள் தந்தியடிக்கின்றன!.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தொடர்புடையவர்கள் யார் என்று சி.பி.சி.ஐ.டி.போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் போலீஸாரின் சந்தேகப் பார்வையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிலர் உள்ளனர். அவர்களுக்கும் நிர்மலா தேவி வழக்கில் உள்ள தொடர்பு குறித்து சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்துக்கு முழு விவரம் அடங்கிய ரிப்போர்ட் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்துவது குறித்து உயர்மட்ட ஆலோசனையும் சென்னையில் நடந்தது. இந்தச் சமயத்தில் விசாரணைப் பட்டியலில் உள்ள சிலரை நீக்கும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், அவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக நிர்மலா தேவி வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழக்கப்படாமல் மூடிமறைக்கப்படவுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ”நிர்மலா தேவி வழக்கில் அரசியல் தலையீடு அதிகளவில் உள்ளது. இதனால், ஒரு கட்டத்துக்கு மேல் விசாரணை நடத்த முடியாதளவுக்கு எங்களின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. நிர்மலா தேவியிடம் விசாரித்தபோது, பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு சிலரின் பெயரையும் உயர் கல்வித்துறையில் ஆளுங்கட்சியின் செல்வாக்கோடு வலம் வரும் சிலரது பெயரையும் அவர் தெரிவித்தார். ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்த எங்களுக்கு இதுவரை மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை.

இதனால், நிர்மலா தேவியின் வழக்கில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. நிர்மலா தேவிக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள செல்வாக்கைப் பார்த்து எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரண பேராசிரியையான அவருக்கென்று தனிப்பட்ட அதிகாரம் அங்குள்ளது. அதோடு அரசியல் பிரமுகர்களின் குறுக்கீடு நிர்மலா தேவி வழக்கில் ஆரம்பத்திலிருந்தே இருந்துவருகிறது. அதையெல்லாம்தாண்டிதான் எங்களது விசாரணையை நடத்திவருகிறோம். பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் முழு விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன்அடிப்படையில் சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. இருப்பினும் உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்!’’ என்றனர்.

”நிர்மலா தேவி வழக்கு நீர்த்துப்போகச் செய்வதற்கான பொலிட்டிக்கல் பிரஷர் அதிகரிக்கிறதா?’’ என்று சி.பி.சி.ஐ.டி உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு. ”இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர். போதிய ஆதாரம் இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. உரிய ஆதாரமிருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தின் விசாரணையால் எங்களது விசாரணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை!’’ என்றார்.

Previous Post

தினகரன் குறித்து ஆரூடம் சொன்ன அமைச்சர் தங்கமணி

Next Post

நடிகர்கள் நம்மை ஆள விட்டுவிடக்கூடாது – நடிகர் விக்னேஷ் ஆவேசம்

Next Post

நடிகர்கள் நம்மை ஆள விட்டுவிடக்கூடாது - நடிகர் விக்னேஷ் ஆவேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures