மண்ணெண்ணெய் விலை நாளை முதல் 31 ரூபாவால் குறைக்கப்படும் என்று கடற் றொழில் நீரியல்வள இரா ஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணை உதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர்கொழும்பு மீனவர் அமைப்புக்கள் உள்ளிட்ட பல மீனவ அமைப்புகள் கடந்த சில தினங்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய தினம் நாட்டின் சகல மீனவ அமைப்பு களையும் இணைத்துக் கொண்டு மீண்டும் போராட்டத்தை நடத்த தயாராகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மண்ணெண்ணை குறைந்த விலையில் வழங்கப்படும் என்று அரசு வாக்குறுதி கொடுத்த போதிலும் இன்று வரையில் தமக்கான மண்ணெண்ணை உதவி கிடைக்கவில்லை என்று கூறியே மேற்படி போராட்டத்தை நடத்தினர்.
இது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறுகையில், அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து மீனவ அமைப்புகள் என்னுடன் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை, நானும் இந்தப் பேச்சுக்களில் இருந்து விலகிக்கொண்டுள்ளேன் – என்றார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி ஊடக அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், நாளை செவ்வாய்க் கிழமை முதல் மண்ணெண்லை விலை குறைக்கப்படும். 101 ரூபாவாக தற்போது உள்ள ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 70 ரூபா வரையில் குறைக்கப்படும் – என்றார்.