நிலக்கண்ணிவெடி தடை செய்வது குறித்த “ஒட்டாவா ஒப்பந்தம்” தொடர்பிலான விசேட பிரதிநிதியும் ஜோர்தான் இளவரசருமான மிரெத் அல் ஹுசைன் இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை (5) இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் விடுத்த விசேட அழைப்பின் பேரில் இவர் இலங்கை வருகின்றார். இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த விசேட பிரதிநிதி எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சர்வதேச விவகாரம் மற்றும் மூலோபாய ஆய்வுகள் என்பவற்றுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும் சிறப்புரையாற்றவுள்ளார்.