Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை சுய மதிப்பீட்டு மாநாடு – 2019 யாழ்ப்பாணத்தில்

June 13, 2019
in News, Politics, World
0
சுய மதிப்பீட்டுமாநாடு– 2019 : பாதிக்கப்பட்டோர் 80 அமைப்புக்கள்,பல்கலைக்கழகங்கள்,மக்கள் பிரதிநிதிகள், அரசநிர்வாகத்தினர் பங்கேற்பு
பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் எனும் தொனிப்பொருளில் சுய மதிப்பீட்டு மாநாடானது நாளை (14.06.2019) யாழ்ப்பாணத்தில் Tilko விடுதியில் உள்ள சோழோ மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருக்கின்றது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழுகின்ற பாதிக்கப்பட்டோர் அவர்களதுவாழ்க்கைப் பயணத்தில் சந்தித்தவையையும்,சாதித்தவையையும் ஆராயும் நோக்கோடு பாதிக்கப்பட்டோரும்,பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரும் இணைந்து இந்த மாநாட்டை நாடாத்துகின்றார்கள். இந்த மாநாட்டினை யாழ்ப்பாணம் றொட்டறிக் கழகமும் – DATA அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
வடக்குகிழக்கைச் சேர்ந்த
மாற்றுத்திறனாளிகள்
பெற்றோரை இழந்தபிள்ளைகள்
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
பிள்ளைகளை இழந்த மூத்தோர்கள்
ஆகியோரைபிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் இந்தமாநாட்டில் கருத்துக்களைபகிர இருக்கிறார்கள். அந்தவகையில் வடக்கிலிருந்து 42 அமைப்புக்களும்,கிழக்கிலிருந்து 38 அமைப்புக்களும் இணைகின்றார்கள். இவர்களோடு யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும்,கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்தமாநாட்டில் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இந்தமாநாட்டிற்கானநிகழ்வுகள் காலை 9 மணிக்குஅங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும். அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு முதலாவதாகபாதிக்கப்பட்டோர் அமர்வுநடைபெறும். இதில் பாதிக்கப்பட்டோரில் பலதடைகளைதாண்டி சாதித்தவர்களில்ஒருசிலர் இந்த மாநாட்டில் கருத்துக்களைபகிர இருக்கிறார்கள். அவர்களில் மாற்றுத்திறனாளியாக இருந்து சாதித்தவர்கள்,பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் இருந்து சாதித்தவர்கள்,பெற்றோரை இழந்து சாதித்தவர்கள் அடங்குகின்றார்கள்.
Previous Post

லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீனின் வழக்குகளை துரிதப்படுத்த உத்தரவு

Next Post

இணையதளத்தில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வில் தகவல்

Next Post

இணையதளத்தில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை - ஆய்வில் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures