ஐக்கிய தேசியக் கட்சியின் நாளை (19) நடைபெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் பின்னர் அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் சேர்ந்து தீர்மானம் ஒன்றுக்கு வருமாறு பிரமரைக் கோரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

