எம்மில் பலரும் நாளாந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக கண்டு ரசித்து வருகிறார்கள். இவர்களில் பலருக்கு நுரையீரல் உள்ளிட்ட பல இடங்களில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு 35 சதவீதம் அதிகரிப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சி பார்ப்பதற்கும், வெனஸ் த்ரோம்போம்போலிஸத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆய்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த ஆய்வின் அடிப்படையில் நாளாந்தம் தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலம் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுகிறது என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 35 சதவிகிதம் இவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும் என்றும் கண்டறியப்பட்டது.
மேலும் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்வையிடும்போது கால்களிலும், ஆழமான நரம்புகளிலும், நுரையீரல் பகுதிகளிலும் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், மேலும் இது தொடர்பான ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மருத்துவத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இத்தகைய பாதிப்பை குறைப்பதற்கு நாளாந்தம் இரண்டரை மணித்தியாலம் வரை மட்டுமே தொலைக்காட்சியை பார்வையிட வேண்டும் என்றும், ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒருமுறை தொலைக்காட்சி பார்ப்பதிலிருந்து எழுந்து, வேறுவகையான உடலியக்க பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சிற்றுண்டி மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
டொக்டர் ஸ்ரீதேவி
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]