நாவலப்பிட்டிய, பொலிஸ் பிரதேசத்திற்கு சொந்தமான வெலிகம்பொல பிரதேசத்தில் பாரிய அளவிலான பாம்பு ஒன்றினால் அந்த பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்ற காலை இந்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த கிராமத்தின் விவசாயி ஒருவர் விவசாய இடத்திற்கு நீர் பெற்று கொள்வதற்காக செல்லும் போதும் இந்த பாரிய அளவிலான பாம்பினை மரவள்ளி மரத்திற்கு அருகில் இருந்ததனை கிராம மக்கள் அவதானித்துள்ளனர்.
கிட்டத்தட்ட இந்த பாம்பு 10 அடி நீளமானதென தெரியவந்துள்ளது.
கிராம மக்கள் அந்த பாம்பை பிடித்து நல்லதண்ணீ வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சில காலங்களாக அந்த கிராமத்தின் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் காணாமல் போவதாகவும் அந்த பாம்பினை இந்த நாய் விழுங்கியிருக்கலாம் எனவும் பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.