விவசாய அபிவிருத்தி தொடர்பான எதிர்கால வேலைத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
நாம் வளர்ப்போம், நாம் உண்ணுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று கொழும்பு கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவு பாதுகாப்பு மற்றும் தேசிய சமுர்த்தி காரியாலயம் ஆகியவற்றை வினைத்திறன் மிக்கதாக மாற்றி முன்னெடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.