வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க நாம் இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை.ஆனால் சிலர் பொய்யான -விசமத்தனமான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
உள்ளூராட்சி சபை தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சமூக ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள் தமிழ்க் கட்சிகளை இணைந்து செயற்பட்டு மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் எம்முடனும் பேசி உள்ளனர். ஆனால் இதுவரை நாம் எந்தக் கட்சியுடனும் இரகசியமாகவோ நேரடியாகவோ பேசவில்லை. சிலர் மக்கள் மத்தியில் பொய்யான விசமத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் – என்றார்.