பாராளுமன்றத்தை உடன் கலைக்குமாறும் அடுத்த தமது புதிய அரசாங்கத்தில் தாமும் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கு இந்த அரசாங்கத்துக்கு தகுதியில்லையெனவும், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பொன்றையே கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் நாட்டை ஒருமைப்படுத்தும் அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதாகவும், இதற்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் முடியுமானால் வாக்களிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத பிரிவு பிரிவாக முன்வைக்கப்படும் அரசியலமைப்பு, பாராளுமன்றத்தின் நன்மதிப்பையும் குறைத்துவிடும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.