Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான் கிரிக்கெட்டுக்கான அமைச்சர் மட்டும் அல்ல: நாமல் ராஜபக்ச

August 13, 2020
in News, Politics, World
0

நான் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டும் நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாமல் ராஜபக்ச தெரிவித்து உள்ளார்.

கண்டியில் உள்ள தலதா மாளிகையில் நேற்று புதன்கிழமை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ச அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

பதவி ஏற்ற பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கிரிக்கெட் அணியில் தற்போது தோன்றி உள்ள நெருக்கடிக்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர், பலரும் கிரிக்கெட்டின் மறுமலர்ச்சியில் கவனம் செலுத்தினாலும் நான் கிரிக்கெட்டுக்கு மட்டும் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சர் மட்டும் அல்ல என்பதனை முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் அனைத்து விளையாட்டுக்களுக்கும் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சர் என்று தெரிவித்து உள்ளார்.

கிரிக்கெட்டுக்கு தனியாக கவனிக்கும் குழு இருப்பதாகவும், முன்னாள் வீரர்களுடன் கலந்தாலோசித்து கிரிக்கெட் விளையாட்டை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.

Previous Post

பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி கோட்டாபய வைத்து இருக்க முடியாது !

Next Post

தமிழரசு கட்சியின் அரசியல் குழு நாளை மறுதினம் திருமலையில் கூடுகின்றது!

Next Post

தமிழரசு கட்சியின் அரசியல் குழு நாளை மறுதினம் திருமலையில் கூடுகின்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures