போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளான பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெஸி மற்றும் வெலே சுதா உள்ளிட்ட கைதிகள் குழு முன் னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கஞ்சிபானை இம்ரான் மீண்டும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உணவு தவிர்ப்பு போராட்டம் காரணமாக ஏற்பட்ட நோய் நிலைமை அடுத்து அவர் பூஸா கடற்படை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவருக்கு வைத்தியசாலையில் ஈ.சி.ஜி பரிசோதனைகள் முன்னெடுக் கப்பட்டதன் பின்னர் அவர் மீண்டும் பூஸா சிறைச்சாலைக்கு மீண்டும் மாற்றப்பட்டு ள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினரான பொடி லெஸி மற்றும் வெலே சுதா உள்ளிட்ட சில கைதிகள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
முன்னதாக 40 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் அவர்களில் 13 பேர் தற்போது போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர் என்பது தெரியவந் துள்ளது.
உறவினர்களுடன் தொலைப்பேசியில் உரையாட சந்தர்ப்பமளிக்கப்படாமை, கைதி களைப் பார்வையிட வரும் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்துதல், சிறைச் சாலை வளாகத்தில் சோதனை மேற்கொள்ளல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் 40 கைதிகளில், கொஸ்கொட தாரக, பொடி லெசி, கஞ்சிபானை இம்ரான் மற்றும் வெலே சுதா போன்ற திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அடங்குவதாகவும், உண்ணாவிரதப் போராட்டத்தைப் பகிஷ்கரித்துள்ள 6 கைதிகளில் பொட்ட நெளபர், கெவ்மா, ஆமி சம்பத் உள்ளிட்டோர் உள்ளடங்குவதாகவும் சிறைச் சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.

