நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருப்பது பாரதூரமானதாகும். இவ்வாறு சிகிச்சையின்று இருப்பது அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேண தெரிவித்தார்.
வீட்டிலிருந்து சிகிக்சை பெறும் தொற்றாளர்களில் பெருமளவானோர் தொற்று அறிகுறிகளுடனேயே காணப்படுகின்றனர். ஒரு மாத்திரமின்றி வீட்டிலுள்ள ஏனைய உறுப்பினர்களும் இவ்வாறு தொற்று அறிகுறிகளுடனேயே காணப்படுகின்றனர்.
ஆரம்பத்தில் தொற்று அறிகுறிகள் தென்படாவிட்டாலும் நாளடைவில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படக் கூடும். குறிப்பாக மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் மோசமான நிலைமைக்கு தள்ளப்படக் கூடும்.
எனவே இவ்வாறான நோயாளர்கள் குறைந்தளவிலான அறிகுறிகள் தென்படும் போது வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]