தாய் நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பாடம் புகட்டியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேர்மையான மற்றும் ஜனநாயகத் தன்மையான அரசியல் சக்திகளுடன் கைகோர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குப் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த நீண்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் ஊழல் மோசடியில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக தனது வாளைப் பயன்படுத்துவேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். கடந்த தேர்தல் மேடைகளில் ஜனாதிபதியின் வாள் குறித்து பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.