பொருளாதாரம் பற்றிய புரிதல் இ;ல்லாத ஒருவரால் நாடு நிர்வகிக்கப்படுவதால் நாடு அதளபாதாளத்தை நோக்கிசெல்கின்றது. அசிங்கமான அமெரிக்கன் நாவலில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அரங்கேறுகின்றன. அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான மோதல் ஆரம்பித்துள்ளது என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் பற்றிய புரிதல் இ;ல்லாத ஒருவரால் நாடு நிர்வகிக்கப்படுவதால் நாடு அதளபாதாளத்தை நோக்கிசெல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடிகளிற்கு தீர்வை காணவேண்டும் என அமைச்சரவைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன அவை செவிடர்கள் காதுகளில் விழவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்தவேளை கருத்து தெரிவிப்பதற்கு தடைகள் கட்டுப்பாடுகள்காணப்பட்டன தற்போது நாட்டின் பொருளதாரம் அழிக்கப்பட்டமைக்கு யார் காரணம் என்பதை வெளிப்படுத்தக்கூடிய நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகளில் அமெரிக்க இராஜதந்திரிகளின் தோல்வியை சித்தரிக்கும் அசிங்கமான அமெரிக்கன் நாவலில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் இலங்கையில் அரங்கேறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிடியிலிருந்து நாட்டை காப்பாற்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை ஆவணங்களுடன் வெளிப்படுத்துவேன்,சதிபோன்ற ஒரு நடவடிக்கை மூலம் நெருக்கடிகள் உருவாக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் அரசாங்கத்துடன்.இல்லாவிட்டாலும்நாட்டை அமெரிக்காவின் பிடியிலிருந்து மீட்பதற்கான போராட்டத்தில் மக்களிற்கு தலைமை தாங்குவேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]