நாட்டை ஆட்சி செய்வதற்கான உரிமை இளைஞர்களுக்கே இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இடம்பெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் எதிர்வரும் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
நாளைய தினம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது.
இதன்காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினை அண்மித்த பகுதியில் சுமார் ஆயிரத்து 700 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

