பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்று (16) வெவ்வேறு விசேட அறிவிப்புக்களை நாட்டு மக்களுக்கு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் அறிவிப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, பிரதமர் நியமனம், நல்லாட்சி அரசாங்கத்தின் பயணம் என்பன தொடர்பில் விளக்கம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதிக்கும் ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெறவுள்ளது. இதன்போது, ஜனாதிபதி இந்த விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் 4.00மணிக்கு அலரிமாளிகையில் இந்த அறிவிப்பை ஊடகங்களுக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.