இலங்கையில் தற்போது கொரோனா வைரஸைத் தவிர மேலுமொரு புதிய வைரஸ் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
தற்போது நாட்டில் பல வைரஸ்கள் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் வைத்தியர் அபிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
கொவிட்-19 உடன், அதேபோன்ற ஒரு வைரஸும் பரவி வருவதாகக் கூறிய கொலம்பகே, மறுபுறம், டெங்கு வைரஸும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரதூரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், ஒமிக்ரோன் மாறுபாடு அல்லது கொரோனா வைரஸின் பிற புதிய வகைகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி, சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சிறப்பு மருத்துவர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவால் இந்த அறிக்கை தொகுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]