நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 89 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகளவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ”குடு சலிந்து” என்பவரின் தரப்பினரால் ”நிலங்க” என்பவரின் தரப்பினரை இலக்கு வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.