நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்தோடு இலங்கை ஒரு புதிய தொழில்நுட்ப சகாப்தத்தின் முன்னோடியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
திவுலபிட்டிய பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு புதிய திட்டம் நாட்டில் செயற்படுத்தப்படும் எனவும் கூறினார்.
தற்போது நாட்டில் ஏராளமானோர் இன்னும் வறுமையில் வாழ்கிறார்கள் என கூறிய சஜித் பிரேமதாச அவர்களின் வறுமையை ஒழிப்பதற்காக சமுர்தி திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அந்தவகையில் குறுகிய காலத்தில் வறுமையை ஒழிக்கும் மற்றொரு திட்டம் சமுர்தி திட்டத்தில் சேர்க்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

