நாட்டில் (நேற்று 23.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 51 ஆண்களும் 31 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 16 ஆண்களும், 05 பெண்களுமாக 21 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 ஆண்களும் 26 பெண்களுமாக 61 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,530 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த ஓரிரு மாதங்களாகக் காணப்பட்ட கொவிட் அபாயம் தற்போது குறைவடைந்துள்ள போதிலும் , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் தொற்று பரவல் தீவிரமடையலாம்.
எனவே முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் உள்ளிட்ட சகலரும் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை வரை 923 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 511 003 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 452 692 பேர் குணமடைந்துள்ளனர். 45 823 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]