எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பெறப்படும் ஆசனங்கள் தொடர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் கணிப்பிட்டுள்ளார்.
அவரின் கணிப்பீட்டின் படி,
மொத்த ஆசனங்கள் :196+29 + 225 (போனஸ் 29 ஆசனங்கள்)
1.மஹிந்தவின் மொட்டுக் கட்சி!
2.சஜித் பிரேமதாசவின் தொலைபேசி சின்னம் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி
3.ஐக்கிய தேசியக் கட்சி
4.ஜே.வி.பி கட்சி
5.இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு –TNA) வடகிழக்கு ஆதிக்கம் .
6).வடக்கில் முதல்வர் விக்னேஸ்வரன் அணி மீன் சின்னம் +சஜித் பிரேமதாசவின் தொலைபேசி சின்னம் கொண்ட “ ஐக்கிய மக்கள் சக்தி” (இந்த அணியில்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் அணி மற்றும் மலையக கட்சிகள் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டி இடுகின்றன) +இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மொட்டுக் கட்சியில் இணைந்து போட்டி இடுகின்றன,
7).வடக்கு கிழக்கில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் அணி மீன் சின்னத்தில் போட்டியிடுகின்றது
வெற்றி வாய்ப்புக்கள் எந்தக் கட்சிகள்!
1) மஹிந்தவின் மொட்டுக் கட்சி : 106 ஆசனங்கள்
2) ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி): 91 ஆசனங்கள்
3) இலங்கை தமிழரசுக் கட்சி : 11 ஆசனங்கள்
4) ஐக்கிய தேசியக் கட்சி : 7 ஆசனங்கள்.
5) ஜே.வி.பி கட்சி : 4 ஆசனங்கள்.
6) விக்னேஸ்வரன் அணி: 2-3 ஆசனங்கள்.
7) முஸ்லிம் காங்கிரஸ் கட்சி: 1 ஆசனம்
8) தேசிய காங்கிரஸ்:1 ஆசனம்
9) ஏனையவை -1 ( இது சிலநேரம் மட்டக்களப்பில் பிள்ளையான் அணியாகவும் இருக்கலாம் அல்லது அம்பாறையில் மயில் சின்னம் ACMC யாகவும் இருக்கலாம்)
இம்முறை நாடு முழுவதும் சராசரியாக 60- 65 வீதமான வாக்குகளே அளிக்கப்பட வாய்ப்புள்ளது!
ஆட்சி அமைக்க வேண்டுமானால் ஆகக் குறைந்த ஆசனங்களாக 113 ஆசனங்கள் வேண்டும்.
மொட்டுக் கட்சி ஆட்சி அமைப்பதற்காக ஐதேக தலைவர் ரணிலிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.சஜித் பிரதமராவதை தடுத்து ரணில் எந்த எல்லைக்கும் செல்வார். பெரும்பான்மை அரசு என்ற ஆட்சிக்கு இடமில்லை.அதனால் மொட்டுக் கட்சி ஆட்சி அமைக்கின்றது .ஆட்சியில் ஜே.வி.பியும் மொட்டுக் கட்சியில் இணைந்து கொள்ளும் ஒரு நகர்வும் உள்ளது.
சஜித் அணி ஆட்சி அமைக்கும் நிலை உள்ளதா ?
ஆம் .ஆனால் ரணில் விரும்பினால் மட்டுமே சாத்தியமாகும் .ரணில் தன்பக்கம் வைத்திருக்கும் 7 ஆசனங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்! அதாவது எந்தப்பக்கம் ஆட்சி அமைக்க வேண்டுமென்றாலும் ரணிலின் தயவு வேண்டும்.
யாருக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இங்கு ஆசனனங்கள் இல்லை என்பதால் சஜித் அணி ஆட்சி அமைக்க வேண்டுமானால் தனது 91 ஆசனங்களுடன்,
1) இலங்கை தமிழரசுக் கட்சி : 11 ஆசனங்கள்
2) ஜே.வி.பி கட்சி : 4 ஆசனங்கள்
3) விக்னேஸ்வரன் அணி: -2-3 ஆசனங்கள்
4)முஸ்லிம் காங்கிரஸ் கட்சி:1 ஆசனம்
இந்தக் கணக்கில் பார்த்தாலும் ஆக மொத்தம் 109-110 ஆசனங்கள் மட்டுமே சஜித் அணிக்கு வந்து சேரும். ஆட்சி அமைக்க ஆள் பிடிக்க வேண்டும். அதாவது ரணிலை சேர்க்க வேண்டும். சஜித் பிரதமர் ஆவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார்.
அவர் எப்போதும் நோகாமல் நொங்கு சாப்பிடும் வல்லமை கொண்டவர் .அதனால் தந்து 7 ஆசனங்களையும் வைத்துக் கொண்டு தனக்கு பிரதமர் பதவி வேண்டும் என்ற டிமாண்ட் செய்யக் கூடியவர் சஜித் அணிக்கு ரணில் இல்லை என்றால் மொட்டு அணிக்குள் இருந்து ஒரு சிறிய அணியை சஜித் அணிக்குள் இழுக்க வேண்டும்.
அதிலும் ஒரு சிக்கல் உள்ளது முதல்வர் விக்னேஸ்வரன் அணி சஜித் அணியில் இணைய விரும்புமா என்பது ஒரு பக்கம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையும் அணியில் மீன் சின்னம் இணையுமா என்பது கேள்விக்குறிதான்?
இப்படி பலரை கொண்டு சஜித் சேர்த்துக் கொண்டு ஆட்சி நடத்துவது பெரும் சிரமம் மட்டுமல்ல மிகவும் கடினமது. ஆக மலையில் மாடு ஏற்றுவது போல் ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சி நீடித்து நிலைக்காது. ஆக சஜித் பக்கமாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வந்தாலும் 5 வருட ஆட்சி நீடிக்காது என்பது மட்டும் உறுதி.
இப்படியான ஒரு வாய்ப்பு விக்னேஸ்வரன் அணிக்கு கிடைக்குமானால் நல்லதொரு வாய்ப்பு என்றுதான் சொல்ல முடியும். சம்பந்தர் அணி விட்ட தவறுகளை அல்லது தமிழ் மக்களுக்கு தேவையான பல தேவைகளை நிவர்த்தி செய்யும் நிலைமைக்கு விக்னேஸ்வரன் அணி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அப்படியொரு நிலை வருமானால் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு செல்லாக்காசாக மாறி முதல்வர் விக்னேஸ்வரன் அணி வடக்கில் மட்டுமல்லாது கிழக்கிலும் தமிழ் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக மாறும்.
முஸ்லிம் காங்கிரஸ் அணியில் ஏறாவூர் நசீர் வெற்றி பெற்றால் மொட்டுக் கட்சிக்கு தாவுகின்றார்.மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் மொட்டுக் கட்சிக்கு தாவும் நிலைமை ஏற்படுமென கணித்துள்ளார்.