சட்டவிரோதமாக துர்க்கி செல்ல முயற்சித்த இலங்கையர்கள் இருவர் அந்த நாட்டு அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்ட பின்னர் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மினுவங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 10000 ரூபாய் அபராத மற்றும் மற்றும் ஒரு லட்சம் ரூபாயிலான சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவராலும் பிணை நிலைகளை நிறைவேற்ற முடியாமையினால் எதிர்வரும் வருடம் ஜுன் மாதம் 12ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அச்சுவேலி மற்றும் பருத்திதுறை பிரதேசத்தை சேர்ந்த ராகமன் சூசை மற்றும் கோக்கிலவாசன் கந்தசாமி என்பவர்களே இவ்வாறு விளக்கமறியலில் லைக்கப்பட்டுள்ளனர்.
போலி விசா தயாரித்து துர்க்கி நாட்டிற்கு செல்ல முயற்சித்து துர்க்கி அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

