Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

January 16, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்பட்டாலும் நாடளவிய ரீதியில் தைப்பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இயற்கைக்கு நன்றி செலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லி, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகின்றது.

நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

புத்தளத்தில் தைப்பொங்கல் 

தைப்பொங்கள் விஷேடப் பூஜை புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. குறித்தி பூஜை வழிபாடுகளில் இந்துக்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் என்று கூறக்கூடிய தைப்பொங்கல் விழா இந்து  ஆலயங்களிலும் அதேபோன்று வீடுகளிலும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தைப்பொங்கல் ஆனது சூரிய பகவானுக்கு நன்றி கூறும் முகமாகவும் நமஸ்காரம் செய்கின்ற முகமாகவும் அதேபோன்று உழவர்கள் தங்களுடைய உழவுத் தொழிலை முடித்து அதில் கிடைக்கக்கூடிய அரிசியை தைத்திருநாளில் பொங்கலாகப் பொங்கி சூரிய பகவான் எனும் கதிரவனுக்கு நன்றி கூறும் முகமாகவும் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலும் தைப்பொங்கள் விஷேட பூஜை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்களின் தலைமையில் பூஜைகள் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் தைப்பொங்கள் விஷேட பூஜைகள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அம்பலவானன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

தைப்பொங்கள் திருநாளைக் கொண்டாடும் இந்து மக்கள் நீராடி புத்தாடை அணிந்து ஆலயத்திற்கு வருகைத் தந்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருந்தது.

மன்னாரில் தைப்பொங்கல் 

தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் வெகு சிறப்பாக பொங்கல் திருவிழா

தமிழர்களின் பெருவிழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் விழா இம்முறையும் மன்னார் மாவட்டத்தில் மிக சிறப்பாக தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டது.

இந்து மற்றும் கத்தோலிக்க ஆலயங்களில் காலையில் இறை வழிபாடுகள் நடைபெற்றபோது பொது மக்கள் பலர் இறைவனுக்கு நன்றி கூறும் முகமாக  ஆலயங்களில் வழிபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பில் தைப்பொங்கல் 

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய விசேட பூஜை வழிபாடுகள்.

வவுனியாவில் தைப்பொங்கல் 

வவுனியா குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில்… சிறப்புற நடந்த பொங்கல் விழாவும், மாட்டுப் பொங்கலும்…

வவுனியா தலமை பொலிஸ் நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் 

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணம் –  நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள்…

நீர்கொழும்பில் தைப்பொங்கல்

நீர்கொழும்பு கடற்கரை தெரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்…

Previous Post

யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Next Post

யாழ். ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Next Post
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

யாழ். ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures