நாகை மாவட்டம் வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சலவை தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தஞ்சையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்று ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
