இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் லொறி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுக்காக, சொகுசு கார் ஒன்றில் டொன்கர்கரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் பயணித்த கார் நாக்பூர் – ராய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது, அங்கு நின்றிருந்த லொறி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழிழந்தனர். மேலும் 4 நான்கு பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.