மாதம்பே, குளியாப்பிட்டிய, உடுபத்தாவ பிரதேசத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே உயிரிந்துள்ளனர்.
மாதம்பே நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே பக்கத்தில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிளின் கண்ணாடி மற்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு அருகில் இந்த மரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர்களின் சடலம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்று காலை இடம்பெறவுள்ள நிலையில் தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.