வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா நாளை காலை 07 மணிக்கு பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது. 23 ஆம் திருவிழாவான இன்று சனிக்கிழமை மாலை-05 மணிக்குச் சப்பறத் திருவிழா இடம்பெறவுள்ளதுடன் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை-07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.
தற்போது அமைதியான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இவ்வருட நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழாவில் கடந்த வருடத்தை விட அதிகளவு பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
