Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லூரில் இரு­நாள் சிலப்­ப­தி­ கார முத்­த­மிழ் விழா

January 17, 2019
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணத் தமிழ்ச்­சங்­க­மும் தமிழ்­நாடு தமிழ்­ஐயா கல்­விக் கழ­க­மும் தமிழ் ஆடற்­கலை மன்­ற­மும் இணைந்து நடத்­தும் இரு­நாள் சிலப்­ப­தி­ கார முத்­த­மிழ் விழா நாளை­யும், நாளை மறு­தி­ன­மும் காலை, மாலை அமர்­வு­க­ளாக நல்­லூர் ஸ்ரீ துர்க்­கா­தேவி மணி­மண்­டப அரங்­கத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

காலை அமர்வு
நாளை காலை 9 மணிக்கு யாழ்ப்­பா­ணத் தமிழ்ச்­சங்­கத் தலை­வர் பேரா­சி­ரி­யர் அ.சண்­மு­க­தாஸ் தலை­மை­யில் நடை­பெ­றும் காலை அமர்­வில் யாழ். பல்­க­லைக்­க­ழக இரா­ம­நா­தன் நுண்­க­லைக் கழக மாண­வர்­கள் தமிழ்த்­தாய் வாழ்த்து இசைப்­பர். யாழ். பல்­க­லைக்­க­ழக இசைத்­து­றைத் தலை­வர் கிரு­ பா­சக்தி கருணா சிலப்­ப­தி ­கார வாழ்த்து இசைப்­பார். தமிழ்ச்­சங்­கச் செய­லர் இ.சர்­வேஸ்­வரா வர­வேற்­பு­ரை­யை­யும் நல்லை ஆதீன முதல்­வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்­த­ர­தே­சிக ஞான­சம்­பந்த பர­மா­சா­ரிய சுவா­மி­கள் ஆசி­யு­ரை­யை­யும் இந்­தி­யத் துணைத்­தூ­த­ரக கொன்­சி­யூ­லர் ஜென­ரல் பாலச்­சந்­தி­ரன் வாழ்த்­து­ரை­யை­யும் வழங்­கு­வர்.

தமிழ்­நாடு டாக்­டர் எம்­ஜி­ஆர் பல்­க­லைக்­க­ழக சிறப்­பு­நி­லைப் பேரா­சி­ரி­யர் முனை­வர் சு.நரேந்­தி­ரன் சிறப்­பு­ரை­யாற்­று­ வார். திரு­வை­யாறு அர­சர் கல்­லூரி மேனாள் முதல்­வர் முனை­வர் செல்­வ­க­ண­பதி தலை­மை­யில் சிலப்­ப­தி­கா­ரக் காப்­பி­ய­மும் கதை­மாந்­த­ரும் என்ற தலைப்­பில் மக­ளிர் அரங்­கும் இடம்­பெ­றும். இதில் வசந்­த­மாலை என்ற பொரு­ளில் தஞ்­சா­வூர் தமிழ்ப் பல்­க­லைக்­க­ழக உத­விப் பேரா­சி­ரி­யர் முனை­வர் எப்.தீபா­வும் கவுந்­தி­ய­டி­கள் என்ற பொரு­ளில் தமிழ்ப் பல்­க­லைக்­க­ழக உத­விப் பேரா­சி­ரி­யர் முனை­வர் எஸ்.கற்­ப­க­மும் மாதரி என்ற பொரு­ளில் தமிழ்ச்­சங்க உப­த­லை­வர் முனை­வர் மனோன்­மணி சண்­மு­க­தா­சும் கருத்­து­ரை­களை வழங்­கு­வர்.

மாலை அமர்வு
மாலை அமர்வு நாளை­ம­று­தி­னம் மாலை 4.30 மணிக்கு யாழ்ப்­பா­ணத் தமிழ்ச்­சங்­கத் தலை­வர் ச.லலீ­சன் தலை­மை­யில் நடை­பெ­றும். நிகழ்­வில் தமிழ்த்­தாய் வாழ்த்து மற்­றும் சிலப்­ப­தி­கார வாழ்த்தை யாழ். பல்­க­லைக்­க­ழக இசைத்­துறை மாண­வன் ஜெ.மது­சி­கன் இசைப்­பார். தமிழ்ச்­சங்க ஆட்­சிக்­குழு உறுப்­பி­னர் ந.ஐங்­க­ரன் வர­வேற்­பு­ரை­யை­யும் யாழ். பல்­க­லைக்­க­ழக கல்­வி­யி­யற் துறைத் தலை­வர் கலா­நிதி ஜெ.இரா­ச­நா­ய­கம் வாழ்த்­து­ரை­யை­யும் பேரா­சி­ரி­யர் எஸ்.சிவ­லிங்­க­ராஜா தொடக்­க­வு­ரை­யை­யும் ஆற்­று­வர்.

சென்னை சுரு­தி­லயா வித்­தி­யா­லய முதல்­வர் முனை­வர் பார்­வதி பாலச்­சந்­தி­ரன், மதுரை பாத்­திமா கல்­லூ­ரித் தமிழ்ப்­பே­ரா­சி­ரி­யர் முனை­வர் க.சரஸ்­வதி ஆகி­யோர் பங்­கேற்­கும் இசை­ய­ரங்­கம், யாழ். கலா­கேந்­திரா நட­னப்­பள்ளி இயக்­கு­நர் முனை­வர் கிரு­ஷாந்தி இர­வீந்­தி­ரா­வின் நெறி­யாள்­கை­யில் நாட்­டிய அரங்­கம் என்­ப­ன­வும் இடம்­பெ­றும்.

Previous Post

சுகாதாரம் தொடர்பில் இலங்கைக்கு வந்த முக்கிய அறிவிப்பு

Next Post

இரா­ம­நா­த­பு­ரம் மீன­வர்­கள் போராட்­டம்

Next Post

இரா­ம­நா­த­பு­ரம் மீன­வர்­கள் போராட்­டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures