Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நல்­லூர் பின்­வீ­தி­யில் உள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி துப்பரவாக்கப்பட்டது !

August 27, 2017
in News, Politics
0
நல்­லூர் பின்­வீ­தி­யில் உள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி துப்பரவாக்கப்பட்டது !

தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யில் நல்­லூ­ரில் அமைந்­துள்ள நினை­வுத் தூபியை தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் நேற்­றுத் துப்­ப­ரவு செய்­துள்­ள­னர்.

தியாக தீபத்­தின் நினை­வு­நாளை கடந்த ஆண்டு ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­பன முன்­னெ­டுத்­தி­ருந்த நிலை­யி­லேயே, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் இந்­தத் துப்­பு­ரவு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இந்­திய இரா­ணு­வத்­தின் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் போராடி வீரச்­சா­வ­ டைந்த தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வு­நாள் அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்­ப­மாகி 26ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்­ளது.

2005ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் திலீ­ப­னின் நினை­வு­நாள் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் அவ­ரது நினை­வுத் தூபி­யில் யாழ்ப்­பா­ணத்­தில் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

கடந்த ஆண்டு ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்­சி­யின் ஏற்­பாட்­டில், நல்­லூர் பின்­வீ­தி­யில் உள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி துப்­பு­ரவு செய்­யப்­பட்டு நினை­வு­நாள் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

அதே­போன்று நல்­லூர் கோயில் முன்­வீ­தி­யில் உள்ள தூபி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பால் நினை­வு­கூ­ரப்­பட்­டது.

வடக்கு மாகா­ண­ச­பை­யின் 102ஆவது அமர்­வில், நல்­லூர் பின்­வீ­தி­யில் உள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யி­னால் பொறுப்­பேற்­கப்­பட்டு, துப்­பு­ரவு செய்­யப்­பட வேண்­டும் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் நேற்­றுத் திடீ­ரென, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத்­தூ­பி­யைத் துப்­பு­ரவு செய்­த­னர்.

இவ்­வாறு துப்­பு­ரவு செய்­ய­வுள்­ளமை தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் ஆத­ர­வா­ளர்­கள் சிலர் முக­நூ­லில் பதி­விட்­டி­ருந்­த­னர். அதற்கு கட்­சியை முன்­னி­லைப்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­ப­டும் இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ரா­கப் பல­ரும் கருத்து வெளி­யிட்­டி­ருந்­த­னர்.

Previous Post

கிராமங்களுக்குள் யானைகள் படையெடுக்கும் யானைகள் !!

Next Post

எடப்பாடி பழனிச்சாமி திடீர் பதவி நீக்கம்: அதிமுகவில் பரபரப்பு

Next Post
எடப்பாடி பழனிச்சாமி திடீர் பதவி நீக்கம்: அதிமுகவில் பரபரப்பு

எடப்பாடி பழனிச்சாமி திடீர் பதவி நீக்கம்: அதிமுகவில் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures