மீன் பனிஸ் துண்டு தொண்டையில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம – பிட்டிபன தெற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற நகர சபை சாரதியான 72 வயதான சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீன் பனிஸ் துண்டு
இது தொடர்பில் மேலும் தெரியவருககையில், உயிரிழந்த நபர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் காலையில் அவர் மீன் பனிஸ் சாப்பிட விரும்புவதாக கூறியதால், குடும்பத்தினர் அவருக்கு அதனை கொடுத்துள்ளளனர்.

இந்நிலையில்,அதன் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக அது அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர், குடும்பத்தினர் 1990 சுவசேரிய நோயாளர் காவு வண்டிக்கு அழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருந்தபோது, அங்குள்ள செவிலியர் நோயாளியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனையில், அவர் சாப்பிட்ட மீன் பனிஸின் ஒரு துண்டு நுரையீரலுக்குள் சென்று சிக்கியதால் ஏற்பட்ட சுவாசக் கோளாறே மரணத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.