ஜி.ஆர்., மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா’. அட்டக்கத்தி புகழ் நந்திதா ஸ்வேதா ஹீரோயினாக நடிக்க, விஜய் வசந்த், எம்எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பல குறும்படங்களை இயக்கிய கீதா ராஜ்புத் இயக்குகிறார். உணர்வுபூர்வமான குடும்ப திரைப்படம் இது. தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை சொல்லுகிற படம். படத்தில் 7 வயது சிறுவனுக்கு தாயாக நடிக்கிறார் நந்திதா.
இப்படத்தின் ஷூட்டிங் இன்று(மே 15) நாகர்கோவிலில் ஆரம்பமானது.