Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

நடைப்பயிற்சி – அறிந்ததும் அறியாததும்

July 29, 2017
in Life, Uncategorized
0

நடை எல்லா உயிர்வாழும் விலங்கினங்கள், பறவைகளுக்குப் பொதுவானவை. பிறந்தது முதல் இறப்புவரை சுவாசம், உணவு எப்படி அவசியமோ அதைப் போல ஒரு வயதிற்குமேல் நடையும் அவசியம் தேவை என ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நாளும் நாம் உணர வேண்டும். அறிய வேண்டும். நாம் தினமும் 5000 மீட்டர் முதல் 800 மீட்டர் வரை நடந்தால் பிணிகள் நம்மை அண்டாது. நோய் ஒட்டி உறவாடாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நடையற்ற வாழ்வில் உணவு கூட ருசிக்காது & வாழ்வில் ஆர்வம் குறையும். நமது ஜீரணம் தடைபடும். வாழவில் இயக்கம் குறையும். தசைத் திசுக்களில் சோம்பலை அதிகரிக்கும் லேக்டிக் அமிலம் மிகும். உடல் கழிவுகள், தேவையற்ற வாயுக்கள் விரைவில் திசுக்கள் இரத்தத்தில் கலக்க ஆரம்பித்து பிணிகள் உருவாகும். மிகும் & மருந்து, மாத்திரைகளை நாடி ஓடி, விதி என்றும் வினை என்றும் விசனப்படுவோம்.

1. எந்தப் பயிற்சிகளையும், ஓட்டம், விளையாட்டுகளையும், நடனங்களையும், கராத்தே போன்றவைகளை ஆரம்ப நிலையில் உள்ளூர் போட்டி, மாவட்டப் போட்டி, மாநில போட்டி, மாரத்தான் போட்டி அளவில் கண்டிப்பாக மேற்கொள்ளக்கூடாது.
2. இன்னும் 500 மீட்டர் நடக்கலாம் என்ற நிலையில் நடையை நிறுத்திக் கொள்ளலாம்.
3. கண்டிப்பாக காலையில் எழுந்தவுடன் காபியைக் குடித்தபின் நடையை மேற்கொள்ளக் கூடாது. காலையில் காபி ஒரு தவறான பானம். படுக்கைக் காபி படுக்கையில் தள்ளும்.
4. காலையில் நல்ல குடிநீர் மட்டுமே ஒரு மடக்கு முதல் 1000 மி.லிட்டர் வரை குடிக்கலாம். அல்லது ஐஸ் கலக்காத பழச்சாறுகள் அருந்தலாம்.
5. நடை நல்லது என எல்லோரும்அறிந்தும், மருத்துவர்கள் சிபாரிசு செய்தும் நாம் நடையை உதாசீனப்படுத்துகிறோம். அதை வாழ்வில் தொடர, நடை தூரத்தை அதிகரிக்க இந்நூல் சில உதவிகரமான உத்திகளை, விளக்கங்களைத் தருகிறது.
6. ஆரம்ப நிலையில் நடைப்போட்டிகளைக் கூடத் தவிர்ப்பது நல்லது.
7. முதல் முப்பது தினங்களுக்கு வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தைச் சுற்றி நடைபயணம் மேற்கொள்வது சிறந்தது.
8. நடைப்பயிற்சியை முடித்தவுடன் 10 நிமிட நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும். உடனே தண்ணீர், பானம், உணவை சாப்பிடக்கூடாது.
9. நடைப்பயிற்சி ஆபத்தில்லாதது. இயல்பானது & பயிற்சியாக அதிகதூரம் நடந்து தேவையற்ற கொழுப்பு, உடல் வெப்பத்தை வெளியேற்றி நலம் பெறலாம். மருந்தாக துணைபுரியும் அல்லது இயல்பான தூரம் வரை சென்று உடல்திசு, இயக்கங்களை மேம்படுத்தலாம். பொதுவுடமையில் நடை மிக முக்கிய பெறுகிறது.
10. நடைப் பயிற்சிக்கு கருவிகள் உபகரணங்கள் தேவையில்லை.
11. நடையுடன் பிற பயிற்சிகள், விளையாட்டுகள், வேலைகளை தாராளமாக இணைக்கலாம். பிற பயிற்சிகள். விளையாட்டுகளைத் தொடங்கும் முன் சிறிது தூரம் நடைசெல்வது நன்மை தரும்.
12. பிணிகள் அதிகரித்தவுடன் நடைப்பயிற்சியைத் தொடங்கினால் அவசியம் கூட்டணி அன்பர்களுடன் செல்லவும்.
13. ஆரம்பநிலை பிணிகளை உடையவர்கள் ஆரம்ப நிலையில் அதிகதூரம் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
14. தாள நடை. இசையுடன் நடை பலனை பலமடங்கு அதிகரிக்கும்.
15. வாழ்நாள் முழுவதும் இயன்ற வரை நடக்கும் முறையிலே நமது உடல் அமைப்புகள், கால்கள் இயற்கையில் அமைக்கப்பட்டுள்ளன.

Previous Post

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்

Next Post

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க

Next Post

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures