Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் – நடிகர் உமாபதி ராமையா திருமணம்

June 13, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் – நடிகர் உமாபதி ராமையா திருமணம்

குணச்சித்திர நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும்,  முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான அர்ஜுனனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் பெற்றோர்கள் நிச்சயித்த வண்ணம்  சென்னையில் உள்ள ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இயக்குநரும், நடிகருமான அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன்- விஷால் நடிப்பில் 2013 ஆம் ஆண்டில் வெளியான ‘பட்டத்து யானை’ எனும் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டில் வெளியான ‘சொல்லி விடவா’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையாவின் மகனான உமாபதி இராமையா 2017 ஆம் ஆண்டில் இயக்குநர் இன்பா சேகர் இயக்கத்தில் வெளியான ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ எனும் படத்தின் மூலம் நாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’, ‘தண்ணி வண்டி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

உமாபதி இராமையாவிற்கும்- ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்களுடைய பெற்றோர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு முறைப்படி திருமணம் நிச்சயம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் இத்தம்பதிகளின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தருணத்தில் விஷால், கார்த்தி, துருவா சர்ஜா, ஜெகபதி பாபு, சமுத்திரக்கனி, கே. எஸ். ரவிக்குமார், ஜி. கே. ரெட்டி, எஸ். ஆர். பிரபு,  கே.ஈ. ஞானவேல் ராஜா, விஜயகுமார், செந்தில், நாஞ்சில் சம்பத், மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Previous Post

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

Next Post

மகாராஜா | திரை விமர்சனம்

Next Post
மகாராஜா | திரை விமர்சனம்

மகாராஜா | திரை விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures