‘பரமசிவன் பாத்திமா’, ‘மார்கன் ‘ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘குற்றம் புதிது’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ குற்றம் புதிது ‘ திரைப்படத்தில் தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி , மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கரண் பி. கிருபா இசையமைத்திருக்கிறார். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தருண் விஜய் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறிய முதலீட்டு திரைப்படம் – புதுமுக கலைஞர்கள்- அடர்த்தியான க்ரைம் திரில்லர் தொடர்பான திரைக்கதை – என்ற பல அம்சங்கள் :குற்றம் புதிது ‘ திரைப்படத்தில் இருப்பதால் … ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படமாக உயர்ந்து இருக்கிறது.