தென்மராட்சி பிரதேசத்தில் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனங்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தி, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலான உணவுப் பொருள்கள் வைத்திருக்கும் வாகனங்களின் சாரதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாரம் சாலைகளில் பொது சகாதாரப் பரிசோதகர்களால் நடாத்தப்பட்ட திடீர் சோதனையில் அகப்பட்ட மூன்று நடமாடும் வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுடன் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

