பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனாந்தரத்தில் எந்தவொரு காணியும் தனியாருக்கு ஒப்படைக்கப்படவோ, விற்கப்படவோ இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் நக்கிள்ஸ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள தோட்டங்களை நிர்வகிக்க திறைசேரியிடம் இருந்து பெருந்தொகை பணத்தைப் பெற வேண்டியுள்ளது. 1992ம் ஆண்டுக்குப் பின்னர் வருடந்தோறும் 100 முதல் 150 கோடி ரூபா வரையான தொகை பெறப்பட்டது.
இது போன்று, வருடந்தோறும் நிதிவழங்க முடியாது என திறைசேரி கூறுகிறது. தோட்டங்களை நிர்வகிக்கக்கூடிய தரப்புகளிடம் அவற்றை ஒப்படைப்பது சிறந்தது என்பது திறைசேரியின் கருத்தாகும். எனவே, குறித்த தோட்டங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் காணிகளை இனங்கண்டு, அவற்றை முறையாக பயன்படுத்தவது பற்றி முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எந்த வகையிலும் பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனாந்தரத்தில் உள்ள காணிகள் விற்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.