வவுனியா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபார நிலையங்களை அற்றும் செயற்பாட்டில் ஈடுபட்ட வவுனியா நகரசபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் வருமான வரி பரிசோதகர்கள் நகர சபை ஊழியர்களுடன் முஸ்லீம் வர்த்தகர்கள் அடாவடியில் ஈடுபட்டருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கை வவுனியா நகர சபையினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக நேற்று (19-04-2018) வவுனியா குருமண்காட்டு பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் வர்த்தகர்களுடைய சட்ட விரோத வியாபார நிலையம் ஒன்றினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட நகர சபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள், வரி பரிசோதகர்கள், நகர சபை ஊழியர்களின் செயற்பாட்டினை தடுக்கும் முகமாகவும், மிகவும் அநாகரிகமாகவும் அவ் முஸ்லீம் வர்த்தகர்கள் நடந்ததுடன், நகர சபை பொது சுகாதார உத்தியோகத்தரை அச்சுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை இவ்வர்த்தகர்களால் பிரதேச வாதத்தை கிளப்பும் வகையில் நகர சபை உத்தியோகத்தர்களுடன் முஸ்லீம் வர்த்தகர்கள் பேசியதை அடுத்து அங்கு குழுமியிருந்த மக்கள் அவ் முஸ்லீம் வர்த்தகர்களுடன் முரண்பட்டிருந்தனர்.