நகர்புற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனபியச நடமாடும் சேவை மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன் முதலாவது கட்டம் கொழும்பு ஏழு அக்கெட் வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.
கம்பஹா, களுத்துறை, காலி, மாத்றை, கண்டி ஆகிய மாவட்டங்களில் நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கால்நடை உணவு தயாரிப்புக்காக என்று கூறி தனியார் வர்த்தகர் ஒருவர் 107 கொள்கலன்களில் சட்டவிரோத முறையில் சோளத்தை இறக்குமதி செய்தமை பற்றி விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் புதிய பல தவல்களை கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த கொள்கலன்களை கைப்பற்றுமாறும் உரிய வர்த்தகரின் அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்யுமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
உரிய வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவிர விவசாய பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

