ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள கட்டமைப்பு தயாரிப்பது குறித்து கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும,மற்றும் ஆசிரியர்-அதிபர்களுக்கான தொழிற்சங்க உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது கல்வி அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஆசிரியர்களை பாதிக்கும் விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

