வடக்கு மாகாண ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களின் நியமனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமையைக் கண்டித்து நேற்று முதலமைச்சர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது.
“இன்று வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் நியமனங்கள் கொழும்பு அலரி மாளிகையில் வழங்கப்படும் என்று ஆளுனரால் எமக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நியமனங்களுக்குள் உள்வாங்கப்படாத ஏனைய தொண்டர் ஆசியர்கள் அண்மையில் முதலமைச்சரை சந்தித்து தமக்கு நியமனங்கள் வழங்க வேண்டும் என்று கோரினர். 7ெ6 பேருக்குமான நியமனங்களை வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என்று முதலமைச்சர் கூறியிருந்தார். அனைவருக்கும் ஒரே தடவையில் நியமனம் வழங்குவதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களின் நியமனங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதைக் கண்டித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.”- என்று போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.
வடக்கிலுள்ள தொண்டர் ஆசிரியர்களில் நியமனம் வழங்கத் தகுதியுடைய 676 பேருக்கும் ஒரே தடவையில் நியமனம் வழங்க வேண்டும் என்று கடந்த வாரம் போராட்டம் நடத்தினர். அந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் செயல்ருக்குப் பரிந்துரைத்திருந்தார்.
இன்று வியாழக்கிழமை 182 பேருக்கு வழங்கப்படவிருந்த நிரந்தர நியமனங்கள் நிறுத்தப்பட்டு அனைவருக்கும் ஒரே தடவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.