சிலாபம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்துடன் மோதுண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதியே முதியவர் உயிரிழந்தார்.
போமுல்லப் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.