துபாயின் மெரினா தீவில் தைரியசாலிகளுக்காக உலகின் நீளமான ‘ஜிப் லைன்’ (கம்பியில் தொங்கியபடி செல்லுதல்) அமைக்கப்பட்டுள்ளது. மெரினா டவர் கட்டிடத்தில் 558 அடி உயரத்தில் தொடங்கும் ஜிப் லைன், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மெரினா ஹாலில் தரையிறங்குகிறது. இதில் செல்வது த்ரில்லான அனுபவமாக இருக்கும். கணவன், மனைவி ஜோடியாக செல்ல இரு கம்பி தடங்கள் உள்ளன. இந்த த்ரில்ரெய்டுக்கான கட்டணம் ஒருநபருக்கு சுமார் 11,000 மட்டுமே.