யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் தெரிவு ஏனையவர்களுக்கு எடுத்துக் காட்டாக அமைய அமைதியாக செயற்பட்டோம். சாத்தியப்படாத விடயங்களுக்கு தேவையில்லாமல் சண்டை பிடிக்கக் கூடாது என்பதாலேயே நான் போட்டியில் இருந்து விலகினேன்.
இவ்வாறு ஈபிடிபி சார்பாக மேயர் பதவிக்கு போட்டியிட்ட சட்டத்தரணி ரெமிடியஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்கான போட்டிகள் இடம்பெற்று சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
–
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் தெரிவு ஏனையவர்களுக்கு எடுத்துக் காட்டாக அமையும் என நம்புகின்றேன். நானோ எனது கட்சியோ சாத்தியப்படாத ஒரு விடயத்துக்காக சண்டைபிடிப்பதில்லை. எமது கட்சிக்கு எமது உறுப்பினர்களை விட வெளியேயும் ஆதரவு உள்ளது என்பதை காட்டவே போட்ட்யிட்டோம். எமக்கான வாய்ப்புக்கள் சாத்தியப்படவில்லை. அதனால் போட்டியிலிருந்து விலகினேன்.
மக்கள் எமக்கு அளித்த வாக்குக்கும் நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கும் அமைய எமது சேவைகள் தொடரும். நாம் மாநகர சபையில் வீண் குழப்பங்களை செய்யமாட்டோம். மக்களுகுக்கான சேவையை அனைவரும் இணைந்து செய்வோம்.-என்றார்.