ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரேஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது முதல், அதன் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீங்கிக் கொண்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியானவுடன் மீண்டும் கட்சித் தலைமையை அவர் ஏற்கவுள்ளதாகவும் அக்கட்சியின் பதில் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் வைத்து கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

